தனிப்பட்ட அதிகார எல்லைக்கான தரங்கள் 2010ஆம் ஆண்டின் தர நடைமுறையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தெரிவுசெய்யும் அடிப்படை

இந்த அதிகார எல்லையுடன் தொடர்புடைய தரவு ஏனைய தகவல் அதிகார எல்லையைவிட அநேகமான அரசாங்க அமைப்புகளிடையே பரவலாகச் சென்றுள்ளது. ஒரு நபரின் பிறப்பிலிருந்து இறப்புவரை அவருடை வாழ்நாள் முழுவதும் இந்த தரவுகளை அலுவலக தேவைகளுக்காக வியாபார அமைப்புகளுடன் சேர்த்து அரசாங்கம், பிரசை ஆகியோர் பயன்படுத்துகின்றனர்.

கருத்திட்ட உரிமையாளர்

செயலாளர், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு

பரப்பெல்லை மற்றும் எல்லை

பரப்பெல்லை

தனிப்பட்ட அதிகார எல்லைக்குள் தகவல்களின் உள்நாட்டு செயற்பாட்டு திட்டம்.

எல்லை

தனிப்பட்ட நபரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அந்த நபர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவரைப்பற்றிய தகவல் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

ஆளுகை

 • கொள்கை குழு
 • செயற்பாட்டு குழு

பங்கீடுபாட்டாளர்கள்

 1. பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு
 2. பதிவாளர் நாயகத்தின் திணைக்களம்
 3. ஆட்பதிவு திணைக்களம்
 4. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு
 5. பணிப்பாளர் நாயகம், தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்
 6. ஆட்பதிவு திணைக்களம்
 7. குடிவரவு குடியகல்வு திணைக்களம்
 8. மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
 9. பரீட்சைகள் திணைக்களம்
 10. இலங்கை மத்திய வங்கி
 11. ஓய்வூதிய திணைக்களம்
 12. பொலிஸ் திணைக்களம்
 13. தபால் திணைக்களம்
 14. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA)

வெளியீடு

தரவுத் தரநிலைகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

கருத்திட்ட இணைப்பாக்க அதிகார எல்லை தரங்கள் 2009ஆம் ஆண்டு பூர்த்திசெய்யப்பட்டன.

தெரிவுசெய்யும் அடிப்படை

அரசாங்கத்திற்குள் மாத்திரமல்ல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்குள் நகர்கின்ற தரவுகள் உள்ள இந்த அதிகார எல்லையைத் தெரிவு செய்வதற்கு தலைமைத்துவம் அளித்தமைக்காக (கருத்திட்டம் 2009ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது) அப்போதைய திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் திருமதி. தாரா விஜேதிலக்க பாராட்டப்பட வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி அளிக்கப்பட்ட கருத்திட்டங்களுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையே தரவுகளைப் பரிமாற்றிக்கொள்ளுவதற்காக தரவு தரங்களை வரையறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் இந்த நிதியத்தின் ஊடாக இக் கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டன.

இந்த ஒப்படையின் நோக்கம் மேற்குறிப்பிட்ட அதிகார எல்லைக்குள் பல்வேறு பங்கீடுபாட்டாளர்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற தரவு ஆக்கக்கூறுகளை வரையறைப்படுத்துவதாகும். இது தரவுகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய விதத்திலும் கொடுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பல்வேறு முறைமைகளுக்கிடையில் சந்தேகமின்றி பயன்படுத்தக்கூடியவாறு அமைகிறது.

கருத்திட்ட உரிமையாளர்

செயலாளர், திட்ட அமுலாக்கல் அமைச்சு (தற்பொழுது திறைசேரி மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர்)

பரப்பெல்லை மற்றும் எல்லை

பரப்பெல்லை

அபிவிருத்தி கருத்திட்ட இணைப்பாக்கத்திற்குள் தகவல்களின் உள்நாட்டு செயற்பாட்டு திட்டத்தின் (வெளிநாட்டு நிதியுதவி அளிக்கப்பட்டது) அதிகார எல்லை.

எல்லை

கருத்திட்டம் பற்றிய அனைத்து தகவல்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து கருத்திட்டம் இந்த அமுலாக்கத்தின் ஊடாக பூர்த்தியடையும் வரை அல்லது முடிவுறுத்தப்படும்வரை, இலங்கை அரசாங்கத்திற்கும் அபிவிருத்தி பங்காளர்/ களுக்குமிடையில் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

ஆளுகை மற்றும் பங்கீடுபாட்டாளர்கள்

 • திட்ட அமுலாக்கல் அமைச்சு
 • வெளிநாட்டு நன்கொடை வழங்கும் நிறுவனங்களால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற கருத்திட்டங்களைக் கொண்டிருக்கின்ற ஏனைய அனைத்து வரிசை அமைச்சுகள்
 • வெளிவாரி வளங்கள் திணைக்களம்
 • தேசிய வரவு செலவு திட்ட திணைக்களம்
 • இலங்கையில் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கின்ற அனைத்து நன்கொடை வழங்கும் நிறுவனங்கள்

வெளியீடு

* முன்னைய தரத்தைப் பார்ப்பதற்கு இந்த இடத்தில் கிளிக் செய்யவும்

Scroll To Top