பின்னனி
பெருமளவிலான தகவல்கள் அரச அமைச்சுகள், திணைக்களங்கள், முகவர் நிலையங்கள் என்பவற்றில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பது தற்போது அரச அலுவல்களில் நிலவும் பிரச்சினையாக இருக்கின்றது. இதைப் பராமரிப்பதற்கு குறிப்பிடத்தக்க வளங்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்த தகவல்கள் பொதுமக்களுக்குத் தேவைப்படுகின்ற மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பயன்படுத்துகின்ற தகவல்களை தகவல்கள் பற்றிய முழுமையான விபரங்களைத் தருவதில்லை. இது தகவல்களைக் களஞ்சியப்படுத்துதல், கையாள்தல், பயன்படுத்துதல் என்பவற்றிக்கு தேசிய தரமொன்று இல்லாததால் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது. இணைக்கப்படாத பரிமாற்றல்கள் மற்றும் களஞ்சியங்களில் உள்ள தகவல்களை ஒருங்கிணைத்தல் என்பவற்றை வழங்குவதற்கான தேவையிருக்கிறது.
இந்த பின்னடைவுக்குள், தகவலை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் சேவைகளை வகைப்படுத்தும் சட்டகத்தை விருத்திசெய்கின்ற ஒரு கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது சிறந்தமுறையில் ஒருங்கிணைந்த தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதை வரையறைப்படுத்தும். இந்த சட்டகம் தோற்றுவாய்கள், உரிமையாளர்கள், கூருணர்வின் மட்டம், தகவல்கள் மற்றும் சேவைகளுக்குத் தேவைப்படுகின்ற பாதுகாப்பு நிலை என்பவற்றை அடையாளம் காண்பதற்கு ஒரு பொது அணுகுமுறையை இந்த சட்டகம் தேடும். மேலும் அரசாங்க நிறுவனங்களுக்கிடையில் உற்பத்தித் திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு வசதிப்படுத்துகிறது. இந்த சட்டகம் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்காக நாடளாவிய ரீதியில் கொள்கை உருவாக்கத்திற்கு ஓர் ஒருங்கிணைந்த மேடையை அமைத்துக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
பரப்பெல்லை
இலங்கை அரசாங்கத்தினால் அதனோடு இணைக்கப்பட்ட பொதுமக்கள் நிதியங்களைப் பயன்படுத்துகின்ற திணைக்களங்கள்/ அமைச்சுகள்/ முகவர் நிலையங்கள் என்பவை ஊடாக உருவாக்கப்பட்ட, உற்பத்திசெய்யப்பட்ட, சேகரிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட அனைத்து தரவுகளுக்கும் ஏற்புடையதானவகையில் தரவு பகிர்வு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தரவுகள் இலத்திரனியல் வடிவத்தில் அல்லது எழுத்துரு பதிவுகள் வடிவத்தில் இருக்கலாம்.
இலங்கை அரசாங்கத்தின் தரவுகள் வகைப்படுத்தல் சட்டகத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வகைப்படுத்தல் என்றவகையில் தரவுகள் பெறுவதை இந்த கொள்கை உறுதிப்படுத்துகிறது. இந்த தரவு மற்றும் சேவை வகைப்படுத்தல் சட்டகத்தினால் தரவு பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இத்தரவுகள் தேவைப்படுகின்றவர்களுக்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளவர்களுக்கும் ஒரேவிதமாக அடையக்கூடியதாக இருக்கும். இந்த தரவு கூறுணர்வுமிக்கதாக இருக்கும்பட்சத்தில் இலங்கை அரசாங்கத்திற்காக தரவு மற்றும் சேவை வகைப்படுத்தல் சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதத்தில் பொருத்தமான கட்டுப்பாடுகளுடன் அதிகாரம்பெற்ற முகவர்களுடன்/ மக்களுடன் தரவு பகிர்ந்துகொள்ளப்படும்.
தகவல்களை வழங்குகின்றவர் மற்றும் தேடுகின்றவரின் உரிமைகளைப் பாதுகாத்து தகுந்த பங்கீடுபாட்டாளர்களுக்குப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவுகளைப் பெறுவதை மேம்படுத்துவதற்கான ஓர் இயற்கை முறைமையை உருவாக்குவதற்கு உதவும் வழிகாட்டல் தொகுப்பையும் கொள்கைகளையும் உருவாக்குவது இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்தக் கொள்கை இலங்கை அரசாங்கத்துடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை பருவந்தோறும் இற்றைப்படுத்தி தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை ஊக்கப்படுத்துவதை வசதிப்படுத்தும் சட்டகத்தை இந்தக் கொள்கை உருவாக்கும். இந்தக் கொள்கை இலத்திரனியல் அல்லது எழுத்துறு பதிவேடுகள் ஆகிய அனைத்திற்கும் ஏற்புடையதாகும்.
“தனிப்பட்டவர்கள், சிவில் சமூகம் மற்றும் நாடு என்பவற்றுக்கு பரஸ்பர நன்மைகளை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பான, நம்பந்தகுந்த முறையில் சரியான நேரத்தில் சரியான மக்களுக்கு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில் ஒருங்கமைந்த மேடையொன்றை உருவாக்குவதாகும்".
இந்தக் கொள்கை பின்வரும் பெறுபேறுகளை அடைய எதிர்பார்க்கின்றது,
1. திணைக்களம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கிடையில் இணைக்கப்படாத தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்
ஒரே இடத்திலிருந்து பிரசைகளை மையப்படுத்திய தகவல்களை மிக வசதியான முறையிலும் வினைத்திறன்மிக்க வகையிலும் தகவல்களை வழங்குதல். இந்த கொள்கை பொதுமக்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதில் மாத்திரமல்ல திணைக்களங்களுக்கிடையில் தரவுகளைப் பகிர்ந்துகொள்வதையும் (அதிகாரமளிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்குள்) மேம்படுத்துகிறது. திணைக்களங்கள் இந்த தரவுகளைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த விடயத்தில் மறுபடியும் தகவல்களை சேகரிக்கும்படி திணைக்களங்கள் வேண்டப்படலாம். ஆனால் கிடைக்கக்கூடிய தகவல்களை ஏனைய திணைக்களங்களுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2. ஒருங்கிணைக்கப்பட்ட e - சேவை விநியோகத்தை உருவாக்குதல்
இந்த கருத்திட்டம் e - ஸ்ரீ லங்காவை அமுல்படுத்துவதற்கு உதவும். இது தனியார் துறைக்கு இடையில் பன்முக பங்கீடுபாட்டாளர் பங்காண்மையை விருத்திசெய்யும். தனியார்துறை மற்றும் சிவில் சமூகம் ICTயின் பங்கிலாபத்தை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு பிரசைக்கும் ஒவ்வொரு வியாபாரத்திற்கும் அரசாங்கம் எவ்வாறு நினைக்கிறது எவ்வாறு வேலைசெய்கிறது என்பதை ஊடுகடத்துவதற்கு உதவகிறது. இந்த சாத்தியத்தின் பிரதான வெற்றி காரணி ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மேடையை அமைத்துக் கொடுப்பதாகும். இதை பொருத்தமான வகைப்படுத்தல் மட்டத்தின் அடிப்படையிலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் அடைய முடியாது.
3. தரவு பொதுமக்களால் வழங்கப்படுகிறது
அரசாங்கத்துடனான தரவு அரச நிதியத்தினால் உருவாக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அல்லது தேசிய ரீதியில் ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதில் தீங்கில்லை. அது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
4. கணிசமானவளவு சதவீதத்திலான தரவுகள் கூருணர்வுமிக்கவை அல்ல
அரசாங்கத்துடன் உருவாக்கப்படுகின்ற பெரும் எண்ணிக்கையிலான தரவுகள் கூருணர்வுமிக்கவையாக இருக்காது. அத்துடன் அத்தகைய தரவுகள் அறிவியல், ஆய்வு, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றபோது அவற்றை வெட்டிக் குறைப்பது தடைசெய்யப்படுகின்றது. அதனால் பொருத்தமான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்குப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தரவுகளுக்கு தேசிய மட்டத்திலான கொள்கை உதவிசெய்யும்.
5. போலியான மற்றும் தரவு ஒருமைப்பாட்டு பிரச்சினைகளைத் தவிர்த்தல்
சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் திட்டமிடப்படுவதற்கும் பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் என்பவற்றுக்கு பொருளாதார மற்றும் சமூக குறிகாட்டிகளை பாரிய பரப்பெல்லையில் உள்ளடக்குகின்ற தகுந்த தரவுகள் தேவைப்படுகின்றன. அரசாங்கத்திற்குள் தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படாதபோது அதே தரவுகள் ஒவ்வொரு திணைக்களத்திற்கு வெவ்வேறாக உருவாக்குகின்றபோது அது போலி தரவுகள் உருவாவதற்கு வழிவகுப்பதால் முயற்சி வீணாவதோடு காலவிரயமும் ஏற்படுகிறது. அத்துடன் பொதுமக்கள் நிதியமும் விரயமாக்கப்படுகிறது.
6. அனைத்து பங்கீடுபாட்டாளர்களின் ஆர்வத்தைப் பாதுகாத்தல்
தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதை மேம்படுத்துவதற்குத் தரவை வழங்குகின்ற நபர் மற்றும் தேடுகின்றவர் ஆகிய இறுவரின் ஆர்வத்தையம் பாதுகாப்பதற்கு ஒரு தரவு பகிர்வு கொள்கை என்ற வடிவத்தில் தேவையான தரங்களையும் பாதுகாப்பையும் செயற்படுத்துவதற்கு பணிக்கப்படுகின்றது.
7. திறந்த அரசாங்க தரவு கொள்கைகளை மேம்படுத்துதல் (opengovdata.org):
(a). உள்ளக செயற்பாட்டு தரங்களை மேம்படுத்துதல் - LIFeஉடன் ஒருங்கிணைத்தல்.
(b). ஒரு சொத்து என்ற வகையில் தகவல்களை வகைப்படுத்துதல்.
(c). தரவுகளின் முழுமையான தன்மைக்கான கட்டுப்பாடுகளை அளித்தல்.
(d). மக்கள் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உரிய நேரத்தில் அவற்றை வழங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.
(e). இயந்திர வாசிப்புக்கு ஏற்ற வடிவத்தில் தரவுகளைத் தயார்படுத்துதல் - தரவு டிஜிட்டல் மயம் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
(f). முறைசாராவிதத்தில் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.
8. திறந்த அரசாங்க கொள்கைகளை மேம்படுத்துதல் (www. opengovpartnership.org):
(a). அரச தகவல்களை அணுகுவதற்கு வசதியளித்தல்.
(b). ஊழல்கள் வினைத்திறனின்மை என்பவற்றைக் குறைப்பதற்கு வழியமைக்கும் தகவல்கள்.
(c). முறைமையில் நிதிசார்ந்த வெளிப்படைத்தன்மை.
(d). தகவல்களை வழங்குவதற்கும் அதன் சரியான தன்மையைப் பேணுவதற்கும் அதிக வகைப்பொறுப்பைக் கொண்டுவருதல்.
(e). அரச சேவைகளுக்கான ஒருங்கிணைந்த வெளிப்பாடு.
(f). தேசியமட்ட ஆளுகையையும் பிரசைகளின் பங்கேற்பையும் மேம்படுத்துதல்.
(g). திணைக்கள ரீதியான பணிப்பாணைகள் அரசாங்க செயற்பாடுகளில் சடடம் மற்றும் உள்முகத்தை அடைவதற்கு அதிக வாய்ப்பளித்தல்.
(h). திறந்த தரவு தேவைப்படும் சேவைகளை விரைவாக அடைவதற்கு வழியமைக்கிறது. அத்துடன் காலத்துடன் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் மனக் குறைகளை அடிப்படையாகக் கொண்டு சேவைகளை வழங்குவதோடு உயர் வகைப்பொறுப்பையும் அளிக்கிறது.
9. ஆளுகை சடடகத்தை உருவாக்குதல்
அரச திணைக்களங்களில் அமைச்சுகளில் தரவு பகிர்வு சட்டகத்தை அமுலாக்குவதை மதிப்பீடு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஆளுகை சட்டமொன்றை உருவாக்குவதில் இந்தக்கொள்கை கவனம் செலுத்துகிறது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள படிமுறைகள் வருமாறு,
(a). தரவுகளைப் பயன்படுத்த முயல்கின்றவர்களுக்குப் பதிலளிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு நபரை நியமிக்க வேண்டும்.
(b). கொள்கைகளை மீறுவதுபற்றிய முறைப்பாடுகளுக்குப் பதிலளிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஒரு நபரை நியமிக்க வேண்டும்.
(c). முகவர் நிலையம் இந்த கொள்கைகளை சரியாகப் பயன்படுத்துகின்றதா இல்லையா என்பதை மீளாய்வுசெய்வதற்கான ஒரு நிர்வாக அல்லது நீதிமுறை ஏற்பாடு.
இவற்றின் விபரங்கள் கீழுள்ள பிரிவில் தரப்பட்டுள்ளது.
10. தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான சட்ட, தொழில்நுட்ப செயற்பாட்டு மற்றும் சட்டக பணிகள் முகாமைத்துவத்தை மாற்றுவது என்பவற்றுக்கான வழ்காட்டல்களை உருவாக்குதல்.
அரசாங்க திணைக்களங்களில்/ அமைச்சுகளில் தர பகிர்வு சட்டக பணிகள் என்பவற்றை உருவாக்குவதற்கு வழிகாட்டுவதிலும் முகாமைத்துவ சட்டக பணிகளை மாற்றுவதிலும் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது. இந்தப் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட வேண்டியுள்ள வழிகாட்டலின் சுருக்கம்கீழே தரப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கீழுள்ள பிரிவில் தரப்பட்டுள்ளன.
A. சட்ட - பாதுகாப்பு கொள்கைகள், புலமைச்சொத்து உரிமைகள், (IPRs) மற்றும் அந்தரங்க வழிகாட்டல்
B. தொழில்நுட்ப - விநியோக பொறிமுறை, சம்பந்தப்படுத்துதல், தரவு தரம் மற்றும் பதிவேடுகளை எண் இடல்
C. செயற்பாடு - திட்டங்களை அமுலாக்கல் மற்றும் இடர் முகாமைத்துவம்
D. முகாமைத்துவ மாற்றம் - பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள்
இலங்கையில் வெளிப்படையான தரவு எண்ணக்கருவையும் தகவலறியும் உரிமையையும் அடைவதில் தேசிய தரவுப் பகிர்வு கொள்கை உருவாக்கம் ஒரு முக்கிய படிமுறையாகும். இந்த தேசிய தரவு பகிர்வு கொள்கை சேவை வகைப்படுத்தல் சட்டகத்திலிருந்து அதன் அடிப்படையைப் பெறுகிறது. அதன் போக்கு தகவலறியும் உரிமையின் ஊடான வலுவூட்டலுடன் தகவல்/ தரவு வகைப்படுத்தல் சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திணைக்கள மட்டத்திலான தரவு பகிர்வு கொள்கை தெசிய தரவு பகிர்வு மூலத்திலிருந்துபெறப்படுகிறது. அத்துடன் அதையே பின்பற்றுகிறது.
தரவு பகிர்வு கொள்கையின் பிரதான ஆக்கக்கூறுகளில் பின்வருவன அடங்குகின்றன:
தரவு வகைப்படுத்தல் சட்டகப்பணி – தரவு வகைப்படுத்தல் பல்வேறு பங்கீடுபாட்டாளர்களுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதன் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தாக்கம் மற்றும் கண்டபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான கட்டுப்பாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சேவை வகைப்படுத்தல் சட்டகபணி – சேவை வகைப்படுத்தல் சட்டகபணி தரவு/ தகவல் சட்டகபணியிலிந்து பிரிக்கப்படுகிறது. அத்துடன் அது ஒரு சேவை என்றவகையில் அது தகவல் சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் (தரவு ஆக்கக்கூறுகளைச் சேகரித்தல்) கவனம் செலுத்துகிறது. இந்த சேவைகள் தரவு அல்லது சேவைகளை மெய்ப்பித்தல் என்றவகையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மேலும் இதை மூன்று நிலைகளில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. அவையாவன - திறந்தவை, அதிகாரமளிக்கப்பட்டவை மற்றும் தடைசெய்யப்பட்டவை என்பனவாகும்.
ஒரு சேவை ஒப்படைக்கப்பட்ட பாதுகாப்பு வகைப்படுத்தல் என்பது குறைந்த பட்சம் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற அல்லது சேவை வழங்கப்படுகின்ற காலத்தில் மாற்றப்பட்ட தரவு உயர் பாதுகாப்பு வகைப்படுத்தல் போன்றதாக இருக்க வேண்டும்.
தரவு பகிர்வு கொள்கை – தரவு பகிர்வு கொள்கை தரவு/ சேவை வகைப்படுத்தல் சட்டக பணியை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய தரவு பகிர்வு கொள்கையின் வரம்புக்குள், தரவு பகிர்வு கொள்கை திணைக்களங்களுக்கு குறிப்பிடத்தக்க தரவு பகிர்வு கொள்கைகள் உருவாக்கப்படலாம். அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதை வினைத்திறன்மிக்க வகையில் நிலைப்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு அது சட்ட, தொழிற்பாட்டு, தொழில்நுட்ப மற்றும் மாறும் முகாமைத்துவ சட்டக பணிகளை உருவாக்குகின்றது.
உலக நல்லாட்சியையும் இலங்கை தரவு மற்றும் சேவைகள் வகைப்படுத்தல் சட்டக பணியையும் அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பிரிவு தரவு பகிர்வு கொள்கை சட்டக பணியை விபரிக்கிறது.
5.1 தரவு பகிர்வு கொள்கைகள்
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் முகவர் நிலையங்கள் என்பவற்றினால் தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றபோது பின்வரும் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்:
A. வெளிப்படைத்தன்மை
தரவு பகிர்வு கொள்கை திணைக்கள செயற்பாடுகளுக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் கவனம் செலத்த வேண்டும். திணைக்களத்தின் உள்ளக செயற்பாடுகள், (திணைக்கள பணிப்பாணையில் குறிப்பிடப்பட்டால் ஒழிய) பிரதான சேவைகளுக்கான நடைமுறைகள், முக்கிய நபர்களின் தொடர்புகள் மற்றும் மேம்படுத்தும் நடைமுறைகள் ஆகிய விடயங்களில் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு திணைக்களம் சேவை வழங்குகின்றது. திணைக்களம் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த சேவைகளுக்கு காலக்கட்டுப்பாடுள்ள நடைமுறைகளை வழங்குகின்றது.
B. புலமைச்சொத்தைப் பாதுகாத்தல்
திணைக்களம் பகிர்ந்துகொள்ளுகின்ற தரவுகள் திணைக்களம் மற்றும் தனிநபர் ஆகிய இருவரினதும் புலமைச்சொத்து உரிமைகளைப் பாதுகாக்கின்றது. திணைக்களத்திற்கான தரவு பகிர்வு கொள்கை புலமைச்சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட தரவுத் தொகுப்பு உரிமைகளைக் கடந்து செல்லாது. அத்துடன் திணைக்கள பணிப்பாணைக்கான புலமைச்சொத்து உரிமைகளுக்கான ஏதேனும் மாற்றங்கள் திணைக்கள தொழிற்பாட்டை நிர்வகிக்கின்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு அமைவாக செயற்படுத்தப்படும்.
C. தரவு அந்தரங்கத்தைப் பாதுகாத்தல்
தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு முன்னர், முற்கூட்டியே தரவு அந்தரங்கத்தன்மை நன்றாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது தரவு அந்தரங்கத்தன்மைபற்றி இலங்கைக்கு தேசிய கொள்கை எதுவும் இல்லை. எவ்வாறாயினும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு முன்னர் தகவல்களின் மூலகர்த்தாக்களிடமிருந்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
திணைக்களங்களுக்குள் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுகின்றபோதும் இதே முறையிலான ஒழுங்குபடுத்தல்கள் தேவைப்படுகின்றன. எவ்வாறயினும் அந்தரங்கத்தன்மைக்கான தரவு விடயம் தரவு பகிர்வு கொள்கையை விஞ்சிச் செல்லுகின்றது.
D. உள்முக தொழிற்பாடு மற்றும் இலங்கை உள்முக தொழிற்பாடு என்பவற்றுடன் தொடர்புபடுத்துதல்
இலத்திரனியல் தரவுகள் பல்வகைப்பட்ட வடிவங்களில் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும் எண்ணிக்கையிலான வடிவமைப்புகள் பரஸ்பரம் எழுத்து குறியீடுகள் அற்றவையாகும். அந்த வகையில் ஓர் அரசாங்க திணைக்களம் பாதுகாக்கின்ற ஆவணங்களின் சொந்த வடிவம் ஏனைய திணைக்களங்கள்/ பிரசைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அத்தகைய காரணங்களினால் அனைத்து அரச திணைக்களங்களால் ஒரு தொகுதி தரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு உதவுவதற்காக உள்முக தொழிற்பாட்டு சட்டக பணி (LIFe) ICTAயினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இது தரவு பகிர்வு தரங்களை நிர்வகிக்கிறது. திணைக்களத்திற்கான தரவு பகிர்வு கொள்கை இலங்கை உள்ளக தொழிற்பாட்டு சட்டக பணியை தேசிய ரீதியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் வசதியை இணங்கியொழுகுகிறது.
E. சட்ட உதவியும் பணிப்பாணைகளும்
திணைக்களம் சட்ட நடைமுறைகள் மற்றும் பணிப்பாணைகள் ஊடாக தரவு பகிர்வுக்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்றது. இந்த திணைக்களம் ஏனைய திணைக்களங்களுடனும் பொதுமக்களுடனும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு வசதியேற்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்களை திணைக்களம் சொந்தமாகக் கொண்டிருக்கும். தேவைப்படும் மாற்றங்களில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கலாம்.
- புலமைச்சொத்து உரிமைகளுக்கான மாற்றங்களும் தரவு அந்தரங்கமும்
- பல்வேறு திணைக்களங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை/ ஏற்றுக்கொள்ளும் உடன்படிக்கை (MoU/MoA)
F. தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் முறைசார்ந்த பொறுப்பு
தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் முறைசார்ந்த பொறுப்புகளை திணைக்களம் ஏற்றுக்கொள்ளும். தரவுப் பகிர்வை வசதிப்படுத்துவதற்கு அனைத்து தேவையான நடைமுறைகள், அணிகள், துணை தொழில்நுட்பம் என்பவை திணைக்களத்தினால் ஒழுங்குசெய்யப்படும்.
G. தரவுகள் சரியாகவும் முழுமையாகவும் இருப்பதன் வகைப்பொறுப்பு
தரவுகள் சரியாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். எனவே தரவுகளின் ஒருங்கிணைப்பை பராமரிப்பதற்கு திணைக்களத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை தகவல் போன்றவை பிழையாக இருந்தால் அது அழிவை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே அந்த தகவல் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
H. தொழில்நுட்ப மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன்
திணைக்களம் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் பொறிமுறை என்பவற்றின் ஊடாக தரவுகளைப் பகிர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதன் கருத்து திணைக்களம் சிறந்த உத்திகளையும் வழிகாட்டல்களையும் பயன்படுத்தும். எனவே தரவு பகிர்வு திணைக்களப் பணிகளில் மேலதிக சுமையாக அமையாது. திணைக்களம் ஆகக் குறைந்த மனித முயற்சியைப் பயன்படுத்தி இணைக்கப்படாத தரவுகளைப் பரிமாறிக்கொள்ளுவதற்கு அந்த நடைமுறைக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும்.
I. இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவமைப்புகள்
அனைத்து திறந்த தரங்களும் (PDF போன்றவை) "இயந்திரத்தில் வாசிக்கக்கூடியவை" என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். அதனால் அந்த தரவுகளைத் தவறாகக் கையாள, மீள நடைமுறைப்படுத்த, பார்க்க, ஏனைய தரவுகளுடன் கலக்க அல்லது இடைச் செயற்பாட்டுக்குட்படுத்த முடியும். அதை சிறந்த தரவுகளாக ஒழுங்குசெய்வது விரும்பத்தக்கதாக இருக்கின்றபோது, அது இயந்திரத்தில் வாசிக்கக்கூடியதாக இருப்பது விரும்பத்தக்கதாகும். (அது நன்றாக XML வரைவிலக்கணப்படுத்தப்பட்டது போன்றது) இந்த விடயம் சம்பந்தமாக தகவல் பகிர்வை இயந்திர வாசிப்பு வடிவத்தில் திணைக்கள கொள்கை பணிப்பாணையில் சோத்துக்கொள்ளப்படும்.
J. விலைக் குறித்தல்
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்து தரவுகள் மற்றும் உற்பத்திகள் என்பவற்றைப் பயன்படுத்துகின்ற அனைவருக்கும் இலவசமானதாகும். அல்லது அதன் தயாரிப்பு அல்லது விநியோக செலவுகளுக்கு மேற்படாத தொகை அறவிடப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அணுகுமுறைக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்ட தரவுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக தரவுக்கு உரிமையாளரான அரசாங்க திணைக்களம் அல்லது முகவர் நிலையம் தீர்மானிக்கும் விலைக்கு தரவைப் பகிர்ந்துகொள்ளலாம். தரவை உருவாக்கிய, உற்பத்திசெய்த அல்லது சேகரித்த முகவர் நிலையம் அதன் உரிமையாளராக இருக்கும். அத்தகைய அனைத்து செலவுகளும் சம்பந்தப்பட்ட அரசாங்க திணைக்களங்களினால் முற்கூட்டியே இணையத்தளம், அறிவித்தல், செய்ததித்தாள் போன்றவற்றில் வெளியிடப்படும்.
K. தரவுகளின் தரத்தைப் பேணுதல்
தரவின் தரம், ஒருமுகத்தன்மை, அதிகார தன்மை என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்காக தரவுக்குச் சொந்தமான திணைக்களம் புள்ளவிபர தொகுப்பையும் ஆளுகையைப் பரப்புவதையும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். தரவு தொகுப்புக்கான நடைமுறைகளை அவதானித்தல் உயர்ந்த தொழில்சார் தரங்களை உறுதிப்படுத்துகின்றது.
குறிப்பு: தகவல் வழங்குநர் அல்லது தகவல் தேடுபவர் ஆகிய இருவரில் ஒருவராக தரவு பகிர்வில் ஈடுபடுகின்ற ஏதேனும் அமைப்பு/ நிறுவனம்/ அமைச்சு/ அத்தகையவற்றை திணைக்களம் என்பது குறிக்கிறது.
தரவு வகைப்படுத்தல் என்பது தரவு பகிர்வு உதாரணத்தை நோக்கி நகரும் முதலாவது படிமுறையாகும். இந்த சட்டகத்தின் ஊடாக இந்த தரவு கூறுகள் அடையாளம் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றின் கூர் உணர்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதன் தாக்கமும் வகைப்படுத்தப்படுகிறது.
சட்டக பணியின் பிரதான ஆக்கக்கூறுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
வகைப்படுத்தல் மட்டங்கள்
ஒரு வகைப்படுத்தல் மட்டம் அந்தரங்க வீதமிடலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. (அல்லது பாதுகாப்பு வீதமிடல்) அது தகவல் ரீதியான சொத்துக்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தகவல் வகைப்படுத்தல் சட்டகப் பணியின் ஒரு பகுதியாக பாதுகாப்பு புள்ளியிடலில் நான்கு பிரதான மட்டங்கள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன "அரச", "வரையறுக்கப்பட்ட அணுகல்', "அந்தரங்கத் தன்மை", "இரகசியம்" என்பவையாகும்.
பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் (DLM)
பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் (DLM) உத்தியோகபூர்வ தகவல்களை அடையாளம் காண்பதற்காக பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் பாதுகாப்பு வகைப்படுத்தலுக்குப் பிற்சேர்க்கையைச் சேர்த்துள்ளனர். பரவலை வரையறுக்கும் குறியீட்டாளர்கள் சட்டத்திற்கேற்ப அல்லது விசேடமாக கையாள வேண்டும் என உரையாடுகின்றபோது தகவல்களுக்கான குறியீட்டை மேற்கொள்ளுகின்றனர். பரவலை வரையறுக்கின்ற குறியீட்டைக் கொண்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துவது சம்பந்தமான பொருத்தமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு திணைக்களங்கள்/ முகவர் நிலையங்கள் பொறுப்பு வகிக்கின்றன. ப.வ.கு.பின்வரும் நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன, கூருணர்வு: கூருணர்வு: தனிப்பட்டது, கூருணர்வு: சட்டம், கூருணர்வு: அரசாங்கம்.
தடை எச்சரிக்கை
தடை எச்சதரிக்கை என்பது தகவல்களை அணுகுகின்ற மக்களை குறித்துரைப்பதற்கு அல்லது வரையறுப்பதற்குள்ள எச்சரிக்கையாகும். தகவலுடன் தடை எச்சரிக்கையைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பாதுகாப்பு குறியீடுகளில் குறிப்பிடப்பட்டவைக்கு மேலதிகமாக விசேட தேவையும் குறிக்கப்படுகிறது. தகவல்களைக் கொண்டிருக்கும் முகவர் நிலையங்கள் கொண்டுள்ள தடை எச்சரிக்கைகள் மீள் லேபல் செய்யப்படவிருக்கிறது அல்லது முகவர் நிலையத்திற்கு வெளியில் கவலை வழங்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்னர் பொருத்தமான நடவடிக்கை மறைக்கு உடன்பட்டது. தகவல்களின் மூல முகவர் நிலையம் தடை உத்தரவை அகற்ற உடன்படாவிட்டால் அத்கவலை வெளியிட முடியாது. மூல முகவர் நிலையத்திலிருந்து உடன்படிக்கையை பெற்றுக்கொள்ள உடன்படுகின்றபோது எந்த சந்தர்ப்பத்தின் கீழும் கொள்கை விடயத்திற்கு விதிவிலக்காக அமையாது. பின்வரும் பாதுகாப்பு தடை எச்சரிக்கை வகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கண்கள் மாத்திரம் (EO), அனுமதி தேவைப்படுகிறது (PR), பூர்த்தியானபோது (WC), வரை விடுவிக்க வேண்டாம் DNRU)
இந்த அடிப்படைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்முறை, நடவடிக்கைமுறை மற்றும் தரவு வகைப்படுத்தல் என்பவற்றுக்கு அவசியமான கருவிகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு சட்டகப்பணி வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. தரவு அடிப்படைக் கூறுகளுக்கு வகைப்படுத்தும் வீதங்களின் ஒப்படைக்கான விரிவான பாய்வு வரைபடம் - இணைப்பு 1இல் தரப்பட்டுள்ளது. தரவு வகைப்படுத்தலை எப்படி செயலாற்றுவது என்பதற்கு தயவுசெய்து- தரவு வகைப்படுத்தல் சட்டக ஆவணத்தைப் பார்க்கவும்.
தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுவது சேவை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தரவு வகைப்படுத்தல் சட்டக பணியை அடிப்படையாகக் கொண்டு தனியான சேவை வகைப்படுத்தல் சட்டகப்பணி திட்டமிடப்படவில்லை. இந்த மாதிரியும் கூட தரவு பகிர்வு கொள்கையுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பின்வரும் பிரதான ஆக்கக்கூறுகளையும் வரையறுக்கிறது.
சேவை வகைப்படுத்தல் மட்டம்
ஒப்படைக்கப்பட்ட பாதுகாப்பு வகைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு, தகவல்களை அணுகுவது தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் குழுவுக்கு அல்லது செயற்பாட்டு அலகுக்கு ஓழுங்குறுத்தப்படுவதோடு மட்டுப்படுத்தப்படலாம். அணுகுவதற்கு வசதியளிக்கின்றபோது அரசாங்க தரவுகள் அரசாங்க நிதியத்தைக்கொண்டு உருவாக்கப்படுகின்றது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே பாதுகாப்பும் அந்தரங்கத்தன்மையும் பேணப்படும் வரைக்கும் இயலுமானளவு இந்த தரவுகளை அணுகுவது தடுக்கப்படலாகாது. அது இலகுவாக அணுகக்கூடியதாகவும் உரிய நேரத்தில் அணுகக்கூடியதாகவும் பயன்படுத்துகிறவருக்கு சிநேகபூர்மானதாகவும் இருக்க வேண்டும். அரசாங்கம் கையாள்கின்ற அணுகக்கூடிய தரவுகள் பின்வரும் வகையில் இருக்க முடியும்.
1. திறந்த அணுகுமுறை
தரவுகளை எந்த தனிப்பட்டவர்/ முகவர் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திறந்த தரவு எனப்படும்போது அதற்கு எந்த நடைமுறை அல்லது பதிவு/ அதிகாரமளித்தல் என்பவை இல்லாமல் தரவைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அதை அனைவரும் கட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
2. அதிகாரம்பெற்ற அணுகுமுறை
குறித்த திணைக்களங்கள்/ நிறுவனங்கள் தமது தரவுகளை அணுகுவதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்/ பதிவுசெய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தால் அத்தகைய தரவுகளைப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட தரவுகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/ அமைப்புகள்/ பொதுமக்கள் பயன்படுத்துனர்கள் ஆகியோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய தரவுகளைப் பெற விரும்புகின்றவர்கள் அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் தரவு ஏன் தேவைப்படுகின்றது என்பதற்கு பெறுமதியான காரணத்தை சரியான ஆவணங்களையும் அதிகாரமளிப்புகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
3. கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறை
தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது அமைப்புகளுக்கு அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் அதிகாரமளிப்பின் கீழ் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்ட தரவுகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட தரவுகளைப் பெற்றுக்கொள்ளாம்.
சேவை வகைகள்
இது வழங்கப்பட்ட சேவைகளின் ஊடாக பகிர்ந்துகொள்ளப்படுகின்ற தகவல்களைக் குறிக்கின்றது. சேவை வகைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு இரண்டு விரிவான வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. தரவு சேவை
தரவுக்குள் இருக்கின்ற சில அல்லது அனைத்து அடிப்படைக் கூறுகள் - அனைத்து தரவு சொத்துக்களின் கூருணர்வு தன்மையிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் மீது சொத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
2. மெய்யுறுதிப்படுத்துவதற்கு மாத்திரம் சேவை
ஒரு தொகுதி உள்ளீடு தரப்பட்டுள்ளது, தரவு மூலத்தில்சரியான மெய்யுறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஆம்/ இல்லை என்ற பதில் தரப்படலாம்.
இந்த அடிப்படைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு, தரவு வகைப்படுத்தலுக்குத் தேவையான கருவிகளுடன் செயல்முறை, நடவடிக்கைமுறை என்பவற்றை இணைத்து ஒரு சட்டக பணி திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களைப் பார்ப்பதற்கு சேவை அடிப்படைக் கூறுகளுக்கு வகைப்படுத்தும் வீதங்களின் ஒப்படைக்கான விரிவான பாய்வு வரைபடம் இணைப்பு 2இல் தரப்பட்டுள்ளது. சேவை வகைப்படுத்தல்பற்றிய மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து - சேவை வகைப்படுத்தல் சட்டக ஆவணத்தைப் பார்க்கவும்.