லங்கா உள்நாட்டு செயற்பாட்டு திட்டம் அரசாங்க தகவல் முறைமைகளில் உள்நாட்டு செயற்பட்டை உறுதிப்படுத்துவதற்கு இருக்கின்ற ஒரு தொகுதி வெளிப்படைத் தரங்களாகும். பல்வேறு அமைப்புகளிலிருந்து இடைவெளியின்றி இணைந்து செயலாற்றுவதற்கு தகவல் முறைமைகளை உள்நாட்டு செயற்பாட்டுக்குப் பரவாலாக்க முடியும். உள்நாட்டு செயற்பாடு உயர்ந்த தரமுள்ள செயற்பாடாக இருக்கிறது.

அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் ஒரே இடத்தில் அமைத்து அனைத்து அரசாங்க சேவைகளையும் ஒரே இடத்திலிருந்து வழங்குவது அரசாங்கத்தின் இறுதி இலக்காகும். இந்த இலக்கை அடையும் பொருட்டு, அனைத்து அரசாங்க  நிறுவனங்களும் இலத்திரனியல் ரீதியாகவும் நடவடிக்கைமுறை ரீதியாகவும் இணைக்கப்பட வேண்டியிருக்கிறது. இவற்றை ஒன்றிணைத்து ஒரே இடத்திலிருந்து வினைத்திறன்மிக்க வகையில் இயங்கி சேவைகளை வழங்குவதற்கு தகவல் முறைமை ஊடாக அரசாங்க நிறுவனங்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுவதற்கும் பகிர்ந்துகொள்ளுவதற்கும் செயற்பட வேண்டும். இதற்கு புரிந்துணர்வுடன் அரசாங்கத்தின் பொது நோக்கத்திற்காக அரசாங்கத்தின் நிறுவன வரையறைகளுக்கு அப்பால் ஒரு பொது தரத்தை உருவாக்குவதற்கு கூட்டாக செயற்பட வேண்டும்.

மேலும் அரசாங்க அமைப்புகள் அவர்களுடைய தகவல் முறைமைகளுக்கிடையில் தரவுகளைப் பரிமாற்றிக்கொள்ளுவதற்காக உள்நாட்டு செயற்பாட்டு பொறிமுறையை விருத்தி செய்துகொள்ள வேண்டும் என வேண்டப்படுகின்றது. உள்நாட்டு செயற்பாட்டு திட்டம் பல்வேறு தகவல் முறைமைகளுக்கு இடையில் ஒன்றோடொன்று இணைக்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம்செலுத்துகிறது. அரசாங்க அமைப்புகளினால் அபிவிருத்தி செய்யப்படுகின்ற இவை முழுமையாக விளங்கிக்கொள்ளப்படுவதோடு உள்நாட்டு செயற்பாட்டு திட்டத்தின் சொற்றொடர்சார்ந்த மற்றும் சொற்பொருள்சார்ந்த  ஆகிய இரண்டையும் அடைகின்றனர்.

Scroll To Top